Thread Reader

RAJESH

@Brasilwala

Sep 23

10 tweets
Twitter

💥(ஓ... அப்படியா?...) 💥உங்களுக்கு தெரியுமா? எத்தனையோ பழமொழிகளும், வழக்காடுகளும் காலப்போக்கில்,  தவறான பொருளிலேயே கையாளப்படுகின்றன.. அவற்றில் ஒன்றுதான்... "பிச்சை எடுத்தாராம் பெருமாளு.. அத்தப் பறிச்சாராம் அனுமாரு.

பெரும்பாலும், இந்த வழக்காடும் தவறான விஷயங்களுக்கே உவமையாகக் காட்டப்படுகிறது.. சரி.. இதன் சரியான பொருள்தான் என்ன?.. பார்ப்போமே... பெருமாள் எப்போது பிச்சை எடுத்தார்?..

தேவேந்திரனுக்காகவும், தான் மிகவும் விரும்புகின்ற தேவர்களுக்காகவும், வாமன அவதாரம் எடுத்து, மஹாபலியிடம் யாசகம் போனார்.. அது சரி... யாசகம் செய்வது அவ்வளவு சுலபமான ஒரு செயலா என்ன?..

சாதாரணமாக ஒருவரை அணுகி, கடனாக ஒரு பொருளையோ, கொஞ்சம் பணத்தையோ கேட்க நேரும்போதே, நமக்கெல்லாம் எண்சாண் உடலும் ஒரு சாணாகக் குறுகிவிடுகிறது... உபயவிபூதி நாதனான பெருமானோ, தன்னைத் தாழ விட்டுக்கொண்டு,  தனது அடியவர்களுக்காக, மஹாபலியிடம் யாசகம் கேட்டுப் போகிறான்...

எதனால்?.. இதைத்தான் அனுமன் ஆராய்ந்தானாம்!.. "பெருமான் தன்னைத் தாழவிட்டுக்கொண்டு யாசகம் போனதன் உண்மையான காரணம், அவனுக்குத் தேவர்கள் மீது உண்டான ப்ரீதிதானே!..

அவனது அந்த ப்ரீதி முழுவதையும் என்மீது திருப்புகிறேன்.." ...என்று எண்ணியவன், இராமனுக்குக் கைங்கர்யம் செய்து, இராமனது மொத்த அன்பையும் தன்பக்கம் திரும்ப வைத்துவிட்டானாம்!.. அனுமனது நெஞ்சில் இராமன் கோயில் கொண்டான்..

ஆனால், இராமனது நெஞ்சை அனுமனோ ஆளுகின்றான்!.. இன்றைய நாளும் இதைக் கண்கூடாக நாம் ஆலயங்களில் பார்க்கலாம்.. தனியாக அனுமனுக்குச் சந்நிதிகளும், கோயில்களும் இருக்கின்றன.

அனுமனுக்குள் இராமனின் சாந்நித்யம் இருப்பதால் இராமன் உடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.. ஆனால் ஒரு இராமன் சந்நிதியை எடுத்துக்கொண்டால், அங்கு பெருமானுடன் அனுமனும் சேர்ந்தே காணப்படுகிறான்..

இராமனின் கடாக்ஷவீச்சு எப்பொழுதும் அனுமன்மீதே இருக்கிறதாம்!.. அந்த அளவிற்கு இராமனின் மனதை அனுமன் ஆள்கிறானாம்!.. இப்படி பெருமான் அன்பினால் யாசகம் போன நிகழ்வை மனதில் இருத்தி,  அனுமன் தனது சேவையினால், இராமனின் மொத்த அன்பையும் பறித்துவிட்டானாம்...

இதைத்தான் நம் முன்னோர்கள், "(அன்பால்)பிச்சை எடுத்தாராம் பெருமாளு.. அத்தப் (அந்த அன்பைப்) பறிச்சாராம் அனுமாரு..." என்றார்களாம்!.... திரு.ரங்கராஜன்

RAJESH

@Brasilwala

A SIMPLE OBSERVER,

Follow on Twitter

Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .