Thread Reader
Theni Siraj

Theni Siraj
@thenisiraj

Nov 25, 2022
14 tweets
Twitter

நவம்பர் 26 1957 தமிழக வரலாற்றில் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். சாதி ஒழிப்பை வலியுறுத்தி சட்ட எரிப்பு போராட்டம்.. ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியான 13(2), 25(1), 26, 29(1) (2), 368 பிரிவுகளைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 1/n

அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. அதற்கான தீர்மானம் 1957 நவம்பர் 3 ஆம் தேதி - தஞ்சாவூரில் தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழக (ஸ்பெஷல்) மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று அரசியல் சட்டத்திலேயே இடம்பெறவில்லை. 2/n
அவசர அவசரமாக மத்திய அரசின் உத்தரவுப்படி சென்னை சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினர். நவம்பர் 3 ஆம் தேதி போராட்ட அறிவிப்பு 6 ஆம் தேதி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் இந்த சட்டத்தை ஆணித்தரமாகவே எதிர்த்தார். மேலும் அண்ணா ‘‘இந்த ஏழு ஆண்டுகளில் இந்திய 3/n
அரசியல் சட்டத்தை 10 முறை திருத்தியிருக்கிறீர்களே, திருத்தங்கள் என்பதே நாகரீகமான முறையில், 10 முறை நீங்களே கொளுத்தி இருக்கி றீர்கள்; தேசியக் கொடியும், சட்டமும் அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் பக்தவத்சலம் கருதுவதுபோல, பெரியாருக்காக 4/n
நீங்கள் கடு மையான சட்டம் கொண்டு வந்தால், மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதைத் தயவு செய்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்ப்பை மீறி அன்றைய காங்கிரஸ் ஆட்சி சட்டத்தை நிறைவேற்றியது. இக்குற்றத்திற்கான தண்டனை 5/n
3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சட்டத்தின் பெயர் ‘‘தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம் (Prevention of Insult To Nation Honour - 1957) என்பதாகும். ஆண்களும், பெண்களும் ஏன் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தைகளுடன் தாய்மார்கள், கண் பார்வை 6/n
இல்லாத தோழர், மாற்றுத் திறனாளிகள், 17 வயது இளைஞர்கள் என்று பத்தாயிரம் பேர் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியைக் கொளுத்தினார்கள் - சாம்பலை உள்துறை அமைச்சருக்கு அனுப்பினார்கள். இந்த போராட்டத்திற்கு முன்பே வேறொரு வழக்கிற்காக பெரியார் கைது செய்யப்பட்டு 7/n
சிறைப்படுத்தப்பட்டார். அவர் இல்லாமல் போராட்டத்தில் 10000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் காவல் துறை 3000 பேரை சிறை படுத்தியது. நீதி மன்றத்தில் ஒவ்வொருவரும் வாக்குமூலத்தில் "நான் ஜாதி ஒழிப்புக் கிளரச்சிக்காரன், இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் 8/n
பாதுகாப்பு அளிக்கப்படும் அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. அச்சட்டத்தை, திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பை காட்டிக் கொள்ள அறிகுறியாக இச்சட்டத் தைக் கொளுத்தினேன். இப்படி கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால், எந்த உயிருக்கும் 9
எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொள்ள தயாராயிருக்கிறேன்". கொண்ட கொள்கைக்காக 10
சிறை சென்ற தோழர்கள் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.. சிறையில் வீர மரணம் அடைந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு (மயிலாடுதுறை) வெள்ளைச்சாமி ஆகியோர் உடலை சிறைச்சாலைக்குள்ளேயே புதைத்துவிட்டனர். வெளியில் வந்து 18 பேருக்கு மேல் இன்னுயிர் நீத்தார்கள். ஆயிரக்கணக்கான தோழர்கள் போராடி 11
பெற்றதை இன்றைக்கு சாதி நெருப்பை சிலர் தூண்டி குளிர்காய நினைத்தாலும் அது பெரியளவில் கண்டுக்கொள்ளாமல் தூண்டுதல் செய்வோரை தனிமைப்படுத்தி கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்திட முடிகிறதென்றால் அதற்கு #பெரியாரெனும்_அருமருந்தே காரணம். சில சாதீய சக்திகள் மீண்டும் துளிர்விட நினைக்கிற 12
சில சாதீய சக்திகள் பாசிச சக்திகளின் பணபலத்தை கொண்டு மீண்டும் துளிர்விட நினைக்கிற இங்நேரம் ஒன்றுபட்டு சாதிவெறியை தூண்டுகிறவர்களை .. அடியாள் வேலைக்கு வா என தைரியமாக அழைக்க துணிகிறவர்களை இனங்கண்டு எதிர்க்கவேண்டும் புறக்கணிக்கவேண்டும். அன்று மூட்டிய எழுச்சி தீயை 13
அணையாமல் இலட்சியத்துடன் பாதுகாப்போம். ஒற்றுமையுடன் மக்களின் முதல்வர் முன்னெடுக்கும் திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி இந்திய ஒன்றிய முழுவதும் சென்றடைய உறுதி ஏற்போம்... #சட்டஎரிப்புநாள்_திராவிடர்திருநாள் @𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠 🙋 @kmp @ஜீரோ நானே⭕ @Keerthana Ram @👁️ 🌹👁️ @இசை
Theni Siraj

Theni Siraj

@thenisiraj
Belongings to Dravidian stock Proudly as a The Black Spectacle team
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .