Thread Reader
Twitter

1957 தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. பஸ் முதலாளிகள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள், பெருமுதலாளிகள் என்று வேட்பாளர்களை காமராஜ் அறிவித்தார். போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக வேட்பாளர்களில் கலைஞர் கருணாநிதி

மட்டுமே இரண்டாவது முறை வெற்றிபெற்றார். அதேசமயம், முதல் தேர்தலில் தோல்வியடைந்த நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெற்றிபெற்றனர். இந்தத் தேர்தலில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸும் பெரியாரும் பொன்முத்துராமலிங்கத் தேவரும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள்.
முத்துராமலிங்கத் தேவர் கடுமையான சொற்களால் திட்டி பிரச்சாரம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்றக் கட்சிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தலைவராகவும், கலைஞர் கருணாநிதி துணைத் தலைவராகவும், கே.ஏ.மதியழகன்
செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை குழுத் தலைவராக நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் சட்டமன்ற மேலவைக்கும் மாநிலங்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணாவும் திமுக தயவில் சுதந்திரா கட்சி சார்பில் ஒரு
வேட்பாளரும் வெற்றிபெற்றனர். 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஏற்படுத்திய அரசியல் திருப்பம் முந்தைய தேர்தலில் வெறும் பதினைந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த திமுக அந்த தேர்தலில் அதைப்போல அதைவிட மூன்று மடங்குகளுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக, நாடாளுமன்றத்துக்கு 7 உறுப்பினர்களை அனுப்பியது. இது அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் ஐந்து தொகுதிகள் அதிகம். தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணா எழுதிய கட்டுரை “காஞ்சிபுரத்துத் தேர்தல் ரகசியம்”
பின்பு புத்தகமாக வெளியானது. அதில் அண்ணா பதிவு செய்திருந்த செய்திகள் முக்கியமானது. “காமராசர் ஒருமுறை என்னிடமே கேட்டார், ‘ஒரு 5 லட்சம் ரூபாய் செலவிட்டால் உன்னைத் தோற்கடிக்க முடியாதா?” என்று. அதை அவர் இப்போது செய்துகாட்டியுள்ளார். எங்களைத் தோற்கடிக்க 5 லட்சம் இல்லை.
கணக்கிலடங்காத லட்சங்களை செலவிட்டிருக்கிறார்கள். அதனால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். அண்ணா அந்த தேர்தலில் தோல்வியடைந்தது திமுகவினரை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியிருந்தது. உடனடியாக அவரைத் தேற்றும் காரியங்களில் இறங்கினார் அண்ணா.
“உள்ளம் உடைய இடம்கொடுக்கக் கூடாது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கழகப் பணியாற்றக் கிளம்புங்கள். நான் வெளியே நிற்கிறேன். எனது அணிவகுப்பு உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாமல் அணிவகுப்பு நடக்க முடியும். ஆனால் அணிவகுப்பு இல்லாத தலைவனை அமைக்க முடியாது. என் தோல்வி
பற்றி வருந்துபவர்கள் நான் இதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னைத் திட்டமிட்டு ஒழித்துக்கட்டுவார்கள் என எனக்கு முன்பே தெரியும். நெடுஞ்செழியனிடமும், கருணாநிதியிடமும் நான் இதுபற்றி பேசியிருக்கிறேன். எப்படி எங்கள் 15 பேரையும் ஒழிக்கப்போவதாகக் கூறி 50 இடங்களைக் கோட்டை விட்டார்களோ,
அதேபோல் அடுத்த முறை 50 பேரை ஒழித்துக்கட்ட போவதாக புறப்பட்டு 75 இடங்களை கோட்டை விடுவார்கள். வெற்றிபெற்று வருகிறது கழகம். நாட்டு மக்களின் ஆதரவு வளர்ந்து வருகிறது. இது சாதாரணமானதல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை எண்ணி உற்சாகத்துடன் செயலாற்றுங்கள்" என உரையாற்றினார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அண்ணா, ராஜாஜி, காயிதே மில்லத், ம.பொ சிவஞானம், பி.ராமமூர்த்தி ஆகியோர் கழுதை மீது ஏறிக்கொண்டு கோட்டை நோக்கிச் செல்வதாக அந்தக் கேலிச்சித்திரம் கூறியது.
திமுக தலைவர்கள் பலருக்கு இது பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராஜாஜியோ துளிகூட பதற்றத்திற்கு ஆளாகாமல், ”காங்கிரஸின் வசமுள்ள கோட்டையை பிடிக்க குதிரை வேண்டாம், கழுதையே போதும் என அவர்கள் எண்ணுகிறார்கள் போலும். எதில் ஏறிப்போனால் என்ன? கோட்டை சேர்ந்தால் சரி” என்றார்.
விகடனில் வெளியான அந்த கேலிச்சித்திரத்தை சுவரொட்டிகளாக மாற்றிப் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் கட்சி. தலைவர்களை கேலி செய்யும் அந்த சுவரொட்டிகளுக்கு தடை விதிக்காதது ஏன்? என்ற கேள்வியெழுப்பிய மு.கருணாநிதி, “எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்யமுடியும் ஆட்சியாளர்களே!
அதிகாரிகளே! இன்னும் ஆறே நாள்! அதிகாரம் மாறும்!" என்று பிப்ரவரி 1967 அன்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசினார். திமுகவுக்கு சாதகமான அரசியல் சூழல் அமைந்தது. ஆனாலும் பெரியாரின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குதான் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் அண்ணாவிடம் இருந்து புதிய
அறிவிப்பு வெளியானது. படி அரிசித் திட்டம்: ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாகக் காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் திமுக தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளும் என்றார். அண்ணாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் உங்களால் முடியுமா என்று பதில் சவால் விட்டனர் காங்கிரஸார்.
இத்தகைய வாய்ப்புக்காக காத்திருந்த அண்ணா, ”ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களுடைய பெருவாரியான ஆதரவை திமுகவிற்கு அளித்திருந்தனர். ஆம், திமுகவுக்கு 138 இடங்கள் கிடைத்தன.
நாடாளுமன்றத்தில் 25 இடங்களில் திமுகவினர் இடம் பெற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சி 49 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வெற்றிச்செய்தி வந்ததும் அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரியாரைச் சந்திக்க விரும்பினர். அப்போது பெரியார், திருச்சியில் இருந்தார். 29 பிப்ரவரி 1967 அன்று அண்ணா,
நெடுச்செழியன், கருணாநிதி ஆகியோர் பெரியாரைச் சந்தித்தனர். “என்னுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு. உங்களைத் தோற்கடிக்க நான் எவ்வளவோ பாடுபட்டேன். ஆனால் நீங்கள் வென்றுவிட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன். எனக்கும், என்னுடைய
கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் ஆதரவாக இருந்து வரக்கூடிய உங்களுக்கு என் அன்பும், ஒத்துழைப்பும் இருக்கும். நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் பெரியார். திமுகவின் வெற்றியைப் பற்றி பின்னாட்களில் பேசிய பெரியார், “அண்ணா போல தனியான
ஒரு கொள்கையை ஏற்படுத்தி, அதன்பேரில் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்தவர் உலகிலேயே லெனின் மட்டும்தான்” என்றும் பெருமையாக பேசினார். திமுக பிரமாண்ட வெற்றிபெற்றிருந்த அந்த சமயத்தில், அந்தக் கட்சியின் சார்பாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டிய அண்ணாவோ தென்சென்னை நாடாளுமன்ற
உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார். எனில் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அண்ணா ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், அப்படிப் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அவைக்கு முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அண்ணா
தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் ஆரம்ப நிலையில் இருந்து உழைத்து, சிறைசென்று, போராட்டங்களில் பங்கெடுத்த பல தொண்டர்களும், தலைவர்களும் இருந்ததால் அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக
நெடுஞ்செழியன், மு.கருணாநிதி இருவரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணா, “அமைச்சர் பதவியை கொடுக்கவேண்டும் என பலரும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் மகிழ்ச்சியை விடத்
தொல்லைகளையும் துயரங்களையும் தான் அதிகமாகத் தாங்கவேண்டி வரும் எனக் கருதுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். திராவிடர் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு, முதல் தேர்தலைப் புறக்கணித்து, அடுத்தடுத்த தேர்தல்களில் படிப்படியாக அதிக இடங்களைப் பெற்று, மூன்றாவது தேர்தலில் பெரும்பான்மையைப்
பெற்று ஆட்சி அமைத்தது பேரறிஞர் “அண்ணா” தலைமையிலான “திமுக”. 1967ல் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, திமுக 137 இடங்களில் வென்று மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தது. அப்போது, ’திமுகவின் வெற்றியைக் கொண்டாடலாமா?. காமராசர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றிருக்கிறார் அதை போஸ்டர்
அடிக்கலாமா?’ என்று கட்சியினர் கேட்ட போது, “காமராஜரின் தோல்வியை கொண்டாடாதீர்கள். அது கொண்டாட கூடியதல்ல. காமராஜர் போன்ற தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதனால் நமது வெற்றிக் கொண்டாட்டங்களைத் தள்ளிப் போடுங்கள்” என்று சொன்னவர் அண்ணா. முன்னாள்
முதல்வர் பக்தவச்சலத்திடம், ‘நல்லாட்சி நடத்த யோசனைகள் இருந்தால் கூறுங்கள்’ என்று பெரிய மனதோடு கேட்டவர் அண்ணா. தன்னிடம் இருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்து சென்றபோது, ‘காது புண்ணானதால் தோட்டைக் கழட்டி வைத்திருக்கிறோம். மீண்டும் அணிவோம்’ என்று பரிவோடு
சொன்னார் அண்ணா. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்திற்கு அண்ணா சென்றபோது, ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஏன் தோல்வி அடைந்தது?’ - என்று கேட்கப்பட்டது. அப்போது, ‘நீண்ட நாட்கள் பதவியில் இருந்ததால்...என்று பதில் சொன்னார் அண்ணா. அங்கே அவர் காங்கிரசைக் குறை சொல்ல விரும்பவில்லை.
அண்ணா அவர்கள் முதல்வராகப் பதவி ஏற்றபோது, அவரது மனைவியைத் தவிர, உறவினர்கள் வேறு யாருக்கும் பதவி ஏற்பு விழாவுக்கான சிறப்பு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படவில்லை. அவர்கள் வெளியே மக்களோடு நின்றுதான் விழாவில் பங்கெடுத்தனர். உறவினர்களுக்கு அவர் பதவியையோ, சிபாரிசையோ ஒருபோதும்
வழங்கியதும் இல்லை. 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பின்னர், அவரது இல்லத்திற்கு சோபாக்கள், நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. ’அவற்றை மாடியில் வைக்கலாமா?’ - என்று கேட்ட ஊழியர்களிடம், ‘கீழேயே வைத்துவிடுங்கள், நாளை பதவி போனால் எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும்!’
என்றார் அண்ணா. அவருக்குப் பதவி ஆசை துளியும் இருந்தது இல்லை. அண்ணா அவர்கள் தலைசீவியதையோ, கண்ணாடி பார்த்ததையோ யாரும் பார்த்ததே இல்லை. 1967ஆம் ஆண்டின் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு மாளிகையில் இடம் இல்லை என்று சொல்லப்பட்டதால் தனது
காரிலேயே தூங்கியவர் அண்ணா. 1968ல் தமிழக முதல்வராக இருந்தபோது தோள் பகுதியில் கிழிந்திருந்த சட்டையைத் துண்டால் போர்த்தியபடி பயன்படுத்தியவர் அண்ணா.
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .