Thread Reader
Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳
@Raamraaj3

Sep 22, 2022
28 tweets
Twitter

ஆ. ராசா எம்பி அவர்கள் வாழ்க. அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. அவரது மறு விளக்க உரையை கேட்காமல் இருந்திருந்தால் நான் ஒரு சாதாரண இந்துவாகவே இருந்திருப்பேன்.

காலையிலேயே நமது தம்பி ஒருவர்'எதுக்கு மன்னிப்பு கேட்கனும்ன்னு சொல்லுடா லூசு?' ன்னு கேட்ட வீடியோவை ஷேர் பண்ணி, இவரோட ஆணவம் அடங்கலேயேன்னு வருத்தப்பட்டிருந்தார்.
அவரு புத்தகத்தில் எழுதியிருக்கற தான் சொல்றேன்னு ஆணித்தரமாக பேசறார். ஆதாரமாக 'பனாரஸ் இந்து பல்கலை கழக' புத்தகத்தை எடுத்து பேசறார். 'என் மேல கேஸ் கேஸ் போடு, உன் புத்தகத்தை வச்சே, உன்கிட்ட பேசறேங்கறாரே.'
உண்மையாக இருக்குமோ என்ற குழப்பத்தில் காலையில் இருந்து ஒவ்வொன்றையும் தேடித்தேடி படிச்சேன். கடைசியில் அவர் குறிப்பிட்ட 'பனாரஸ் பல்கலை கழக சனாதன தர்மம்' புத்தகமும் கிடைத்தது, ஆங்கிலத்தில். 484 பக்கங்கள், 258 பக்கம் படிச்சேன், மணி பத்தரை ஆகிடுச்சு.
ஆனால் படிக்க படிக்க பேரானந்தம், சில பக்கங்கள் படிக்க சலிப்பாக இருந்தாலும், நமக்கு தேவையான 'ராசா சொன்ன சூத்திரன்' குறித்த பகுதியை தேடி படித்தேன்.
ஆ. ராசா சொன்ன மாதிரி, பிராமணன் தலையில் இருந்தும், க்ஷத்திரியன் கைகளில் இருந்தும், வைசியன் தொடைகளில் இருந்தும், சூத்திரன் பாதத்தில் இருந்தும் பிறந்தவன், அப்படியே இருக்கிறது.
'மகாபாரதத்தில்' கண்ணன் சொன்னதை போல 'நால் வகை வர்ணத்தையும் நானே படைத்தேன்' என்று இறைவனே சொன்னதையும் எழுதி இருக்கிறார்கள். நிற்க.
குழப்பமா இருக்குல்ல. அந்தாளு சொன்ன விஷயங்கள் ஒன்னு ரெண்டு. ஆனால் அதில் மனதில் கொள்ள முடியாத ஏராளமான விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.
கடவுள் தத்துவம், வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சூத்ரங்கள், கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள், வேறுபட்ட உலகங்கள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் படைப்பு, ஜீவாத்மா, மனித வாழ்வியல் பகுப்பு, மனிதனின் கடமைகள், சுத்தம் பராமரிப்பது, குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது,
பெரியோர்கள் இறந்த பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள், வர்ணாசிரமங்கள், நால் வகை வர்ணங்கள், ஒவ்வொரு வர்ணத்தாரின் கடமைகள்... அப்பப்பா. இன்னும் 190 பக்கங்களில் எத்தனை அற்புதங்கள் இருக்குமோ தெரியவில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம். நால் வகை வர்ணம் குறித்து சனாதனம் என்ன சொல்கிறது? * 'பிறப்பினால் ஒருவன் உயர்ந்த, தாழ்ந்த வர்ணத்தவனாக ஆவதில்லை' * பிறக்கும் போது ஒவ்வொருவரும் 'சூத்திரர்களே', வளர்ந்த பிறகு அவர்களின் நடத்தையே, அவனது வர்ணத்தை வகுக்கிறது.
* வேதங்களை கற்று தேர்ந்த, வேதம் வகுத்த படி சிற்றின்பங்களை தியாகம் செய்து (ஆச்சாரமாக), இறைபணி செய்பவன் பிராமணன். * மக்களையும், தேசத்தையும் காக்கும் பணியை கைகொண்ட பராக்கிரமசாலிகள் சத்திரியர்கள்.
* விளைந்தவற்றை எடுத்து மற்ற இடங்களுக்கு கொண்டு சென்று விநியோகித்து, அங்கே இருப்பவற்றை கொண்டு வந்து இங்கே தேவயானவர்களுக்கு பொறுப்புடன் கொடுப்பவன் வைசியன் * இந்த மூவகை வர்ணத்தாரின் சொல் கேட்டு, அவர்களுக்கு பணி செய்பவன் சூத்திரன், கடை நிலையில் உள்ளவன். (அடிமை அல்ல) வேலைக்காரன்.
258 பக்கங்கள் வரை சூத்திரன் குறித்து ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. அப்புறம் ஏன், சூத்திரன் இறைவனின் பாதத்தில் இருந்து பிறந்தான் என்கிறது வேதம்?
அறிவார்ந்த மூளையும், பலம் மிகுந்த தோள்களும், வலிமையான தொடைகளையும் பெற்ற ஒருவனுக்கு,  பாதங்கள் இல்லை என்றால் அவனது நிலை என்ன? அவனால் எவ்வாறு இயங்க முடியும்? இவ்வளவு தான் விஷயம்,
'சூத்திரர்கள் தான் இந்த அகில உலகமே இயங்க காரணம்.' மூவகை வர்ணத்தாரும், நான்காம் வகை சூத்திரன் இல்லை என்றால் அவரவர் தர்மத்தை, கடமையை செய்ய முடியாது.
யாகங்களை செய்யும் பிராமணர்களே அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் உருவாக்குகிறார்களா? மக்களையும், மண்ணையும் காக்கும் சத்திரியர்களே தங்களது பாதுகாப்பு கருவிகளை செய்து கொள்கிறார்களா?
விளைந்தவற்றை விற்று பொருள் ஈட்டும் வைசியனே, அனைதத்தையும் விளைய வைத்து வண்டி செய்து வேற்றிடம் சென்று விற்று வருகின்றானா? பிராமணன், சத்திரியன், வைசியன் மூவரும் சூத்திரன் எனும் 'வேலை'க்காரன் இல்லை என்றால் தத்தமது தர்மங்களை ஆற்றிட முடியாது.
இதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது. எவ்வளவு அருமையான விஷயத்தை இவர்கள் திரித்து சொல்லி வாதிடுகின்றனர்? வேத காலத்தில் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றனர், எப்படி?
'தன்னிடம் கல்வி கற்க வந்த சிறுவனிடம் அவனது கோத்திரம் என்ன என்று கேட்கிறார் குரு, அதற்கு சிறுவன் 'எனக்கு தாயின் பெயர் மட்டுமே தெரியும், எனது குலத்தை பற்றி தெரியாது' என்கிறான். அவனது பதில் உண்மையானது, நேர்மையானது அதனால் அவனை தனது சீடனாக ஏற்று கொள்கிறார் அந்த குரு.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும், "அப்படி என்றால் மகாபாரத கர்ணன் ஏன் பிறப்பால் புறக்கணிக்கப்பட்டான் என்று," இங்கே தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 'கால வேறுபாடு'. முந்தைய நிகழ்வு நடந்தது வேத காலத்தில்,
இரண்டாவது நடந்தது பல யுகங்களுக்கு பிறகு. இங்கே தான் கண்ணன் சொல்கிறான், "நால்வகை வர்ணத்தை நானே படைத்தேன். ஆனால் பிறப்பினால் ஒருவனது உரிமைகளை புறக்கணிக்க சொல்லவில்லை' என்று. பிராமணனாக பிறந்த ஒருவன் தனது கடமைகளில் இருந்து தவறிவிட்டால், அவனது நிலை கீழிறக்கப்படுகிறது.
அதேவேளையில் 'சூத்திரன்' ஒருவன் தனது மேம்பட்ட எண்ணங்களால், அப்பழுக்கற்ற சிந்தனைகளால், நேர்மையான நடத்தையால் 'பிராமணனாக' உருவெடுக்கிறான். ஆம், ஒருவனின் நடத்தையே  அவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்பதை முடிவு செய்கிறது. 'பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை'
இதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது. ஆனால் யுகங்கள் மாற மாற, மக்கள் மனம் விசாலமாக தனது கண்களை விரித்து இந்த அண்டத்தை காண்பதற்கு பதிலாக, தனது சிந்தனைகளை சுருக்கி கொண்டு தர்மங்களை மறந்து விலகி சென்று விட்டதால் ஏற்பட்டதே, இன்றைய குறுகிய சாதிய கண்ணோட்டம்.
இதை எனது 'சனாதன தர்மம்' போதிக்கவில்லை, இது சத்தியம். 'இதை உணர்ந்த இன்றைய நாளை எனது வாழ்வின் பொன்னாளாக நான் கருதுகிறேன்.' மனு தர்மம் பற்றி இன்னும் படிக்கவில்லை. சனாதனத்தின் அங்கமான மனு, கேவலமான பகுதிகளை கொண்டிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.
இறுதியாக, 'ஒருவர் உயிரிழந்த பிறகு, அந்த ஆத்மா விற்கு செய்யவேண்டியதாக சில கடமைகளை வலியுறுத்தி சொல்லும் சனாதன தர்மம், உயிருள்ள மனிதனை பிறப்பால் தாழ்த்தி சொல்லுமா?'
அறிவுள்ள அனைவரும் இதை கவனமாக சிந்திக்க வேண்டும். ஆ.ராசாவிற்கு மீண்டும் எனது நன்றிகள். ஆனால் இதற்கு மேல், திரும்பவும் எனது தர்மத்தை இழிவாக பேசினால், அவருடன் வாதம் செய்ய நான் தயாராக இருப்பேன் என்று சவால் விடுகிறேன்.
'சனாதன தர்மம்' காக்க நான் சத்திரியனாகவே களத்தில் இருக்கிறேன். பகிர்வு.நன்றி:வைரவேல் சுப்பையா #சிந்திக்க_வைத்த_பதிவு
Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

@Raamraaj3
ONE NATION ONE LAW ஒரே தேசம் 🇮🇳🙏 ஒரே சட்டம் 🇮🇳🙏 JAI HIND 🇮🇳🙏
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .