Thread Reader

"தோழர்" #சில்க்ஸ்மிதா என்கிற #விஜயலட்சுமி நினைவுநாள் இன்று! பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, கடும் நெருக்கடியை பிரதமர் இந்திரா, சந்தித்து கொண்டிருந்த நேரம் அது!, ஒருநாள் கையில் புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இருந்தது.

அதை பார்த்த இந்திரா.. "Who is this Silk?" என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டாராம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால், அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதுதான் சில்க். ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ..அதுவாகவே அவர்களின்
பிம்பம் நம்மில் தங்கிவிடுகிறது அதுதான் சில்க். சினிமாவில் நாம் பார்த்த சில்க்கிற்கும், அவரது தனிப்பட்ட சுய-விருப்பு-வெறுப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருந்திருக்கின்றன. விற்காத உட்சநட்சத்திரங்களின் படங்கள் கூட, சில்க்கின் ஒரு பாட்டை உள்ளே திணித்து..நுழைத்தது தனிக்கதை.
ஹீரோக்கு இணையாக சில்க்கின் போஸ்டரை ஒட்டினால் தான் படம் மாபெரும் வியாபாரமாகி, வசூல் சக்கை போடு போடுமென்று வலுவாக நம்பப்பட்ட பெண். ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் வரும்போதெல்லாம், மரியாதை நிமிர்த்தமாக எல்லோரும் எழுந்து நிற்பார்கள். சில்க் மட்டும் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பாராம்.
இதைப்பற்றி அங்கிருந்தோர் பதறிக்கொண்டே கேட்டதற்கு, "நான் எழுந்து நின்னா, என்னுடைய குட்டி ட்ரஸ் சிவாஜி சாருக்கு கூச்சத்தை தந்திடும், அவருக்கு அந்த தர்மசங்கடம் வரக்கூடாதுன்னு தான் நான் உட்கார்ந்தே இருக்கேன்!" என்றாராம். கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமல் இந்த பெண் இப்படி ஆடுகிறாளே..?
என்று சொன்னவர்களுக்கு, அடுத்தவரின் கூச்சத்தை உணர்ந்த சில்க்கின் மனசு பற்றி தெரிய வாய்ப்பில்லை. வடபழனி குமரன் காலனியில்தான் சில்க்ஸ்மிதாவின் வீடு. தெருவில் பிள்ளைகள் விளையாடுவதை கண்டால், "#ஸ்கூலுக்கு_போங்கப்பா_படிப்புதான்_ரொம்ப_முக்கியம்" என்ற அறிவுரைகள் தந்த சில்கையும் தெரியுமா?
அரைகுறை ஆடையுடுத்தி, சம்பாதித்த பணத்தையெல்லாம் கண்ணுக்கு தெரியாமல், எத்தனையோ ஏழை பிள்ளைகளின் படிப்புக்கும், நற்காரியத்திற்கும் செலவழித்த சில்க்கையும் தெரிய வாய்ப்பில்லை. இவரை அறிமுகம் செய்துவைத்த வினுசக்ரவர்த்திக்கும் இவருக்கும் தவறான தொடர்பு இருப்பதாக வந்த செய்திகளை பார்த்து..
"இப்படியெல்லாம் கூட செய்தி எழுதுவாங்களா?" என்று பலமுறை அதிர்ந்து கேள்வி எழுப்பிய சில்க்கை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. சில்க்கும் எனக்கும் அடுத்தப்பிறவினு ஒன்னு இருந்தா, அதுல என் மகளா பிறக்கனும்னு ஆசைப்படுறேன் என்று நடிகர் வினுசக்ரவர்த்தி கலங்கி போய் சொன்ன வார்த்தைகள்!
வினுசக்ரவர்த்தி கூறிய வார்த்தையை, அழுக்குப் படிந்த நபர்கள் உணர வாய்ப்பில்லை. தோழர் இளவேனில் ஒரு கட்டூரையில் இதை குறிப்பிட்டிருந்தார். நிருபருக்கு சில்க் பேட்டி தருகிறார். "நக்சலைட் ஆகவேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். அது நடக்கவில்லை. நாளும் நாளும் நெருங்கிய பிரச்சனைகளின்
அலைகள் என் மீது மோதி மோதி என் வாழ்க்கை திசைமாறிப்போனது. ஆனால் அந்த நெருப்பு இன்னும் என் நெஞ்சில் எரிந்துகொண்டு தான் இருக்கிறது!" என்றார். அதற்கு நிருபர் "நக்சலைட்" என்றால் யார்? அது உங்களுக்கு தெரியுமா மேடம்?" என கேள்வி கேட்க, #நக்சலைட்_என்றால்_அரசாங்கத்தால்_தேடப்படும்_குற்றவாளி!
என்று நிருபர் கூறிய பதிலுக்கு சுமிதாவிடமிருந்து பெரும் மூச்சு வெளிப்பட்டது. "அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மை விட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள்!" என்று நான் நினைத்து கொண்டிருக்கிறேன், #சர்வாதிகாரிகள்தான்_அப்பாவிகளைகூட_ஆயுதம்_தூக்கவைக்கிறார்கள்!
சில்க்கின் இந்த கம்பீரமான பதிலைக் கேட்டு, நிருபர் திகைத்துப்போனார். புகழின் உச்சத்தில் இருக்கும் எந்த ஒரு நடிகையும் இப்படி ஆசைப்படுவார்களா.? என்று எனக்கு தெரியவில்லை. தான் விரும்பிய வாழ்க்கை வாழமுடியாவிட்டாலும், தன்னை விரும்பியவர்களுக்கான வாழ்க்கையை அமைத்து வாழ்ந்தவர் #சில்க்.
எத்தனையோ நக்சலைட்டுகளுக்கு கடைசிவரை, பல உதவிகளை மறைமுகமாக செய்து வந்துள்ளார். இவரை அவர்கள் #அக்கா என்றுதான் பாசத்தோடு அழைப்பார்களாம். தன்னை பற்றின எத்தனையோ கேவலங்கள்,அவதூறுகள்,உயரங்கள்,பள்ளங்கள் வந்தாலும், கலங்காமல் அவைகளை துணிச்சலுடன் கடந்து சாதித்துள்ளார் தோழர் சில்க்ஸ்மிதா.
தனக்கு என்ன தேவை என்பதை மட்டும் கடைசிவரை அறிந்து கொள்ள முடியாத அபாவியாகவே இவர் இருந்துள்ளார். #திமிர்பிடித்தவள் எனும் பட்டத்தை தட்டிச்சென்ற சில்க், நிஜத்தில் ஒரு மிருதுவான குழந்தை என்பதை நெருங்கிப்பழகியவர்கள் மட்டும் இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ..அது உண்மையும் கூட!
சமூக ஒழுக்கம்,சமூக கட்டுமானம், என்ற வரையரைக்குள் இவரை கொண்டுவந்து பார்க்க பலரும் விரும்பவில்லை என்பதே உண்மை. சில்க்குக்கு முழு ஆடையை அனுமதிக்க தயாரிப்பாளர்களும், அன்றைய பத்திரிக்கைகளும் தயாராக இருந்தனவா? என்ற கேள்வியையும் இங்கு எழுப்ப யாரும் தயாராக இல்லை. வலி நிறைந்த வாழ்க்கை..!
வாழ்க்கையின் மீது பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்கள் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், பழிகள்-காயங்கள் எல்லை மீறிய சூழலிலும்தான் அப்படி ஒரு சோக முடிவை எடுத்திருப்பார் போல?! , இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று சொல்லி, வழக்கை நாசூக்காக மூடியது ஒருபுறம் இருப்பினும்..,
தற்கொலைக்கு தூண்டியவருக்கு ஒரு தண்டனையும் சட்டத்தில் இல்லையா.? என்ற சந்தேகமும் நமக்கு இயல்பாக எழுகிறது. ஸ்மிதாவுக்கு போதிய படிப்பறிவு இல்லை. அதுதான் தற்கொலை முடிவுக்கு காரணம் சுகாசினி சொன்னதாக எனக்கு நியாபகம். ஒருவேளை சில்க்கிற்கு கல்வி அறிவு இருந்திருந்தால், தன் பிரச்சனைகளை..
உறுதியோடு சமாளித்திருப்பாரா என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏனெனில், இராணுவ பலத்தில் நின்ற பட்டேல் இரும்பு மனிதரா? அல்லது இராணுவத்தை எதிர்த்து நின்ற மக்கள் இரும்பு மனிதர்களா? என்று படிப்பறிவு இல்லாத சில்க் கேட்ட கேள்வியில், ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது.
ஒருமுறை பாலுமகேந்திரா இவரை பற்றி சொன்ன வரிகள் தான் எனக்கு நினைவில் வருகிறது. "#ஒரு_பேரழகிங்கறத_தாண்டி_எத்தனை_அற்புதமான_ஆன்மா_அவள்?!!! 🕊🕊❤🌹 #பதிவு_ஹேமவந்தனா_ரவீந்திரதாஸ்
கோரைப்பல் புலி KoraippalPuli
சமத்துவ மனிதன். பொதுவுடமை விரும்பி. சங்கிகளை கூண்டோடு ஒழிப்பவன். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்.
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .