Thread Reader
Twitter

சிலர் தமிழிலும் கேட்பதால், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பதிவு. #சைவம் #சிவச்சின்னங்கள் 1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2. சிவனுக்கு #அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ஐப்பசி பவுர்ணமி 3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்

#தட்சிணாமூர்த்தி 4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? #திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் #திருக்கடையூர் 6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் #பட்டீஸ்வரம் 7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன்
மீது பாடியவர் #திருமூலர் 8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் #திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்) 9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது #துலாஸ்நானம் 10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது #கடைமுகஸ்நானம் 11.சிவனுக்கு மாடக்
கோயில் கட்டிய மன்னன் #கோச்செங்கட்சோழன். 12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் #நடராஜர் (கூத்து என்றால் நடனம்) 13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் #சிதம்பரம் 14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் #காசி 15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் #திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் #மயிலாப்பூர்_கபாலீஸ்வரர்_கோயில் 17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் #மயிலாப்பூர்_தேவாரம் (சம்பந்தர் பாடியது) 18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர் #சின்முத்திரை 19. கயிலாயத்தில்
தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் #சுந்தரர் 20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் #ஸ்ரீசைலம் (ஆந்திரா) 21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் ஒரிசா மாநிலம் #பூரி_ஜெகந்தாதர்_கோயில் 22. இறைவன் இறைவிக்கு இடபாகம்
அளித்த தலம் #திருவண்ணாமலை 23. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் #பரணிதீபம் (அணையா தீபம்) 24. அருணாசலம் என்பதன் பொருள் அருணம்+ அசலம்- #சிவந்த_மலை 25. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை ஆதாரமாகத் திகழ்கிறது #மணிபூரகத் தலம் 26. திருவண்ணாமலையில் பவனி
வரும் சோமஸ்கந்தரின் பெயர் #பக்தானுக்ரக_சோமாஸ்கந்தர் 27. #கார்த்திகை_அகல்தீபம் என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு 1997, டிசம்பர் 12 28. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் #திருவண்ணாமலை (கிளி கோபுரம்) 29. #கார்த்திகை_நட்சத்திரம் தெய்வங்களுக்கு உரியது - சிவபெருமான்,
முருகப்பெருமான், சூரியன் 30. குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் #24நிமிடங்கள் (ஒரு நாழிகை) 31. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் #அனுமன் 32. நமசிவாய என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? #திருவாசகம் 33. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி
வருவதை எப்படி குறிப்பிடுவர்? #அறவிடை (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) 34. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் #அறம்_பொருள்_இன்பம்_வீடு(மோட்சம்) 35. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? #108வகை 36. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்
#காரைக்கால்_அம்மையார் 37. மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்று நடராஜரிடம் வேண்டியவர் #அப்பர் (திருநாவுக்கரசர்) 38. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம் #ஆணவம்_அடங்கினால்_ஆனந்தம்_உண்டாகும் 39. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் #குற்றாலம்
அன்பெழில்
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .