Thread Reader

இது இந்த காலத்திற்கு தேவையான ஒரு வரலாற்றுப் பதிவும் கூட...படியுங்கள் முடிந்தவரை பகிருங்கள்...! பகிருங்கள்...! பகிருங்கள்...! இது வரலாற்றின் நீங்காத கறையான ஹிட்லர் என்ற சர்வதிகார எண்ணம் கொண்ட கொடுங்கோலனைப் பற்றியது மட்டுமே.😂😂இன்று உயிருடன் வாழும் அல்லது வாழ்ந்து மறைந்த யாரவது

ஒருவரோடு இந்த விஷயங்கள் பொருந்திப் போனால் அதற்கு யாரும் பொறுப்பல்ல 😂 1. ஹிட்லர் திருமணமாகதவர் என்று தன்னை தானே கூறி வந்தான் ( இவா ப்ரவுண் யரென்று கேட்காதீர்கள்). 2. ஹிட்லர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்று கூறி வந்தான்...!
3.ஹிட்லரை விமர்சிப்பது அவனுக்கு மட்டுமல்ல..அவனது அல்லக்கைகளுக்கும் பிடிக்காத விஷயம்...ரொம்ப கடுப்பாகிவிடுவார்கள்... 4. ஹிட்லர் சிறுவயதில் படங்களை வரைந்து, பின்னர் அவைகளை விற்று வருமானம் தேடினான்.. 5. ஹிட்லர் அன்றைய தினம் எல்லாவித ஊடகங்களையும் தன்னுடைய புகழை பரப்பும் “marketing”
கருவியாக பயன்படுத்தினான்...! 6. ஹிட்லர் எல்லா தொழிலாளர் இயக்கங்களையும் இரும்புக் கரம் கொண்டு நசுக்கினான்...! 7. ஹிட்லர் தன்னை எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகள் என்றோ கோமாளிகள் என்றோ அழைப்பது வழக்கம்.... 8. ஹிட்லர் நாஜிக் கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து பின்னர் மூத்த
தலைவர்களை ஓரங்கட்டியும் தீர்த்துக்கட்டியும் கட்சியின் தலைமை பதவியைப் பிடித்தான்! 9. ஜெர்மனியின் எல்லா பிரச்சனைகளையும் நிமிட நேரத்தில் தீர்த்து விடுவதாகக் கூறி பிரச்சாரம் செய்து தான் அதிகாரத்தைக் கைப்பற்றினான..! 10. ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு பயபடுத்திய வாசகம்
"Good days to all” ஆகும்... 11. ஹிட்லரின் நாஜிக்கட்சி வெற்றிபெற்று ஜெர்மனி பாரளுமன்றத்திற்குள் நுழையும் போது வாய்விட்டு அழுதான்.! 12. ஹிட்லர் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஒரு அலங்காரப் பிரியனாகவே, ஏன் ஒரு வெறியனாகவே இருந்தான் என்று சொல்லலாம்.! 13. ஹிட்லர் பொய்களை உண்மையென்று
நம்ப வைக்கும் அபார திறமை படைத்தவனாவான்....இதற்காக கோயபல்ஸ் போன்றவர்களை அமைச்சராக்கி தன்னுடன் வைத்திருந்தான்...! 14. ஹிட்லர் எப்போதும் “நான்”, “என்னை”, “எனக்கு” போன்ற வார்த்தைகளை பேசும் போது மிக அதிகமாக உபயோகித்து வந்தான்...! 15. ஹிட்லருக்கு வானொலியில் தற்பெருமை பேசி தன்னைப்
பற்றி தம்பட்டம் அடிப்பதில் அதிக விருப்பம் இருந்தது... 16. ஹிட்லருக்கு ஒரு காதலி இருந்தாள்...அவளைக் கூட நம்பாமல், அவளுக்குத் தெரியாமல், அவளையும் வேவு பார்த்து வந்தான்...! 17. ஹிட்லர் எப்போதும் பேசும் போது Friends/ அன்பானவர்களே / சினேகிதர்களே என்பன போன்ற வசீகரிக்கும் வார்த்தைகளை
அலங்காரத்திற்கு பயன்படுத்துவதுண்டு.... 18. ஹிட்லருக்கு அவனது புகைப்படம் எடுப்பதிலும், தன்னை ஓவியமாக வரைவதிலும் தீராத வெறி இருந்தது...! 19.இதுபோன்ற தற்குறி மனநிலையே அவனை கடைசியாக தற்கொலை செய்ய தூண்டியதும்....😂😂 @மௌனம்(JC-DMK) @நீலகண்டன் @Robin @தேவ்...🖤❤️
தென்குமரி தென்றல்
💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .