Thread Reader

1002 Stanley Rajan அவர்களது பதிவு மிண்டோ மார்லி கமிஷனின் சிபாரிசு படி இந்தியாவுக்கு உள்ளாட்சி அதிகாரம் கொடுத்த பின் முதல் சென்னை மாகாண மேல் சபை கூட்டம் 1919ல் சென்னை கோட்டையில் நடந்தது அப்பொழுது நரசிம்ம ஐயர் எனும் பிராமண உறுப்பினர் தமிழில் பேச தொடங்கினார், அப்பொழுது கவர்ணர்

பெட்லாண்ட் மறித்து ஆங்கிலத்திலத்தில் பேச சொன்னார் இது எங்கள் தமிழகம் , தமிழில்தான் பேசுவோம் என மகா உறுதியாக தொடர்ந்து பேசினார் நரசிம்ம அய்யர், ஆம் ஜனநாயக ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணன் 1957ல் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக பேச தொடங்கினார் ஈ.வி.கே சம்பத்,
சம்பத் மிகபெரும் பேச்சாளர் ஆங்கிலமும் தமிழும் அவருக்கு ஆழகாய் வரும், டெல்லியில் அவர் ஆங்கிலத்தில் பேச, சபாநாயகராக இருந்த அனந்த சயனம் அய்யங்கார் எனும் தமிழர் "நீங்கள் தமிழரல்லவா? தமிழில் பேசுங்கள்" என சொல்லி உற்சாகபடுத்தினார் ஆம் டெல்லியிலும் தமிழில் முழங்க வேண்டும் என
உற்சாகபடுத்தியவன் ஒரு பிராமணன் இந்த நரசிம்ம அய்யர், அனந்த சயனம் அய்யங்கார் பற்றி தமிழனுக்கு தெரியுமா என்றால் தெரியாது. இங்கு எல்லாம் அப்படித்தான், பூராவும் திராவிட புரட்டு, அப்பட்டமான வரலாற்று மோசடி. இப்படி ஏராளமான தமிழ் வளர்த்த பிராமணர்கள் இருந்தனர் அவர்களுக்கு முன்னோடி இந்த
சாமிநாதய்யர் உ.வே. சாமிநாதய்யர் எனும் தமிழ்தாத்தா. தமிழகத்தில் அச்சுக்கலையினை கொண்டு வந்து பேப்பரில் அச்சிட்டவன் சீசன் பால்கு எனும் ஜெர்மானியன் அவன் தரங்கம்பாடியில் அதை செய்தான் காகித அச்சில் அவன் பைபிளை தமிழ்படுத்தி கொடுத்தான், தொடர்ந்து கிறிஸ்தவ விவகாரங்கள் வந்து கொண்டே
இருந்தன, தமிழுக்கும் சைவத்துக்கும் எதிரான கருத்துக்களை தாங்கிய விஷயங்கள் வந்து கொண்டே இருந்தன‌ உண்மையான தமிழன் வரலாறும் சைவமும் பக்தியும் ஓலை சுவடியில் தூங்கி கொண்டிருந்தன, அதை அச்சில் ஏற்றுவார் இலர், ஏற்ற முயன்றாலும் வெள்ளை அரசும் அவர்களின் ரகசிய ஏஜென்டுகளும் விடுவதாக இல்லை
ஆனால் அந்த சாமிநாதய்யர் உணர்ந்தார், இனி ஓலைசுவடியில் இருக்கும் தமிழனின் சைவ இலக்கியமும் நூல்களும் அச்சுக்கு வராவிட்டால் தீர்ந்தது விஷயம் ஆம் அந்த அளவு விஷ கருத்துக்கள் பரப்பப்ட்டன் திருகுறள் இஷ்டபடி வளைக்கபட்டது, இன்னும் பல வரலாறுகளும் பாடல்களும் திருத்தபட்டன‌
அந்த இக்கட்டான நிலையில்தான் தன் போராட்ட , தியாகமான வாழ்வினை தொடங்கினார் சாமிநாதய்யர் இந்த ஈரோட்டு ராம்சாமி, நீதிகட்சி , அண்ணாதுரை எல்லாம் பொங்கி கொண்டிருந்தபொழுது , தமிழை வாழவைப்போம், பிராமணனை ஒழிப்போம், பிராமணன் தமிழின விரோதி துரொகி என சொல்லி கொண்டிருந்த பொழுது மிக பொறுப்பாக
தன் தமிழ் கடமையினை செய்து கொண்டிருந்தார் சாமிநாதய்யர் பிராமணன் ஒழிக, தமிழ் வாழ்க என சொல்லி கொண்டிருந்த கோஷ்டி தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று
பிராமணனை விரட்டுவது, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணரை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று. பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ்
அரசனும் பிராமணன் இல்லை. ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ..ஹி .. பிரமணன் வேறு பார்ப்பானியம் வேறு என சென்றுவிடுவார்கள்.
தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பலர் உண்டு பின்னாளில் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள். சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள்
சைவத்தை அழிக்க தமிழை வளர்த்தார்கள், தமிழ் அதிலும் வளர்ந்திருந்தது அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த
பிராமணர்களின் வரிசை பெரிது. தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே. பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை
மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது? தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌. ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்கலையும், இலக்கியங்களையும் முதன் முதலில்
அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த இந்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே அவரின் உழைப்பம், தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.
அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில் மடங்களில் தமிழ் வித்த்வான் வீடுகளில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும்விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.
500 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000 மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி. தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி. வள்ளுவன், கம்பன்,அவ்வை, சங்கால புலவர்கள் என எல்லோரையும் ஏட்டில் அவர்தான் காட்டினார்
இந்த‌ ஐம்பெரும் காவியம் சிறுங்காவியம் சங்கநூல்கள் பத்துபாட்டு எட்டுதொகை பதினொன்கீழ் கணக்கு , பதினொன்மேல் கணக்கு என எல்லா நூல்களும் அவராலேதான் அச்சுக்கு வந்தன‌ காலம் மிக சரியான நேரத்தில் கொடுத்த தமிழ் கொடை அவர். இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால்
தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர். ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம். சுற்றி இருக்கும்
இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும். அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர். அக்காலத்தில்
அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை. எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை
காப்பாற்றிய பெருமகனார் அவர். மிக சரியான காலத்தில் வந்து கிறிஸ்தவ திராவிட கும்பல் தமிழ் ஓலைசுவடிகளை கைபற்றி பல விஷயங்களை மறைக்கு முன், அவற்றின் உண்மை பொருளை மறைத்து தமிழனுக்கு மதமில்லை, சைவ மதம் என எதுவுமில்லை என மிக பெரும் புரட்டை ஏற்படுத்திய காலத்தில் சரியாக வந்தார் அவர்
எதை செய்ய வேண்டுமோ அதை செய்து பழம் சங்க இலக்கியம் முதல் எல்லாவற்றையும் ஓலைசுவடியில் இருந்து மீட்டு நம் கைகளுக்கு தந்துவிட்டு சென்றுவிட்டார் இல்லையேல் மிகபெரும் குழப்பமும் சிக்கலும் இங்கு வந்திருக்கும், மாபெரும் சைவ அடையாளம் மறைக்கபட்டு அவன் மொட்டை அடிக்கபட்டிருப்பான்.
சாமியாதய்யர் தன் நெடும் போராட்டத்தை நடத்தியபொழுது ஒவ்வொரு ஓலையாய் மீட்டு அச்சில் ஏற்றிய பொழுது சைவ சித்தாந்த கழகம், ஆதீனம், மடங்கள், ஆலயங்கள் அவருக்கு உதவின‌ இந்த நீதிகட்சி, திராவிட கழகமெல்லாம் அய்யரை ஒரு மனிதனாகவே நோக்கவில்லை, தமிழை தேடுகின்றாரே, தமிழர் அடையாளத்தை அச்சில்
ஏற்றுகின்றாரே என கொஞ்சமும் உதவவில்லை தமிழை வாழவைப்போம் என சொல்லிகொண்டே தமிழை உண்மையில் வாழவைத்த அந்த பெருமகானை சாதியால் ஒதுக்கி, மதத்தால் விரட்டி அடித்தார்கள் இதுதான் அவர்கள் தமிழுக்கு உழைத்த லட்சணம், தமிழை வாழ வைத்த வரலாறு காலத்தால் வந்த அந்த பிராமண கிழவன், தமிழை காத்து
தமிழ் அடையாளத்தை காத்து தந்த தெய்வம், இன்று அவருக்கு நினைவு நாள் அந்த தமிழ்முப்பாட்டனுக்கு தமிழ் வணக்கம். ஒரு காலம் வரும் அப்பொழுது தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துக்கு அவர் பெயர் சூட்டபடும், அந்த தமிழ் கடவுளின் பெயரும் புகழும் நிலை நிறுத்தபடும் புலனத்தில் படித்து பிடித்து பகிர்ந்தது
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .