Thread Reader
Deva

Deva
@Deva_twitt

Nov 25, 2022
5 tweets
Twitter

பெரியாரின் வரலாறும் தெரியாது, பெரியாரியமும் தெரியாது . ஆனா பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்தார் அப்படீன்னு குய்யோ முறையோன்னு லூசுத்தனமா பொதுவெளியில் கூப்பாடு போட வேண்டியது. பெரியார் தன் வாழ்வில் எந்த கட்டத்திலும் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. சொல்லப்போனால் பெரியாருடைய மிக

நெருங்கிய தோழரே மிக பெரும் வைதீகவாதியான பார்ப்பனரான ராஜாஜிதான். ராஜாஜியின் காந்தி ஆசிரமத்தை திருச்செங்கோட்டில் துவக்கி வைத்தவரே பெரியார்தான். ராஜாஜி இறந்த அன்று ராஜாஜி குடும்பத்தினர் கதறியதை விட பெரியார் கதறியதுதான் அதிகம் என்பதை வரலாறு அறியும். மிக பெரும் பகுத்தறிவுவாதியாக
பெரியார் உருவெடுத்ததே பார்ப்பனர்கள் நிரம்பிய காசியில் சில காலம் வசித்த பிறகே. பார்ப்பனர்கள் சூழ்ந்த காசி மடத்தில் மீசையை மழித்துக்கொண்டு பார்ப்பன வேடமிட்டு சில வருடங்கள் ஊழியம் செய்தவர் பெரியார் என்பது பலருக்கு தெரியவே தெரியாது. கருத்தியல் ரீதியாக வர்ணாசிரம தர்மத்தையும் மூட
நம்பிக்கைகளையும் தூக்கி பிடித்து மனிதர்களை சாதிய அடுக்குகளால் பாகுபடுத்திய பிராமணீயத்தை மட்டுமே அவர் எதிர்த்தாரே ஒழிய பிராமணர்களை அவர் எந்த காலத்திலும் வெறுத்ததில்லை என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் உண்மை வரலாறு முக்கியம் அப்பரசண்டிகளா !! வரலாற்றை படிங்கடா அப்பரசண்டிகளா !!
பொறவு பெரியாரை பற்றி வாயை பிளக்கலாம் !!!😏😏
Deva

Deva

@Deva_twitt
#அன்பைவிதைப்போம் 💐 #மனிதம்காப்போம் 🙏 ஐம்பெரும் காப்பியங்களா'ன 😍 #பெரியார் 🖤#அம்பேத்கார் 💙#அண்ணா #கலைஞர் #ஸ்டாலின் 🖤❤️ belongs to the dravidian stock 🔥
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .