Thread Reader
M.Shankar

M.Shankar
@Shankar0174

Mar 19, 2023
6 tweets
Twitter

*முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு எப்படி அப்ளை பண்ணி வாங்க வேண்டும்*.. அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க.. காப்பீடு திட்ட கார்டு என்று கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க..

(குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.) பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.. அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும்
அதை கேட்டு அங்கு செல்லுங்கள் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள் செலவு ஏதும் கிடையதுங்கோ. இந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்
மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம். இதுல ENT சர்ஜ்சரிஸ் , கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட
பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்.. எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தேவைப்படும் நேரத்தில் அங்கும் இங்கும் அலைவதைத் தவிர்த்து இப்பவே அலைந்து காப்பீடு அட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நன்றி : பகிர்வு தகவல்
மேலும் உங்களுக்கு எதாவது உதவி தேவைப்பட்டால்.. உடனே தொடர்பு கொள்ள 👇 cmchistn.com
M.Shankar

M.Shankar

@Shankar0174
Don't raise your voice improve your arguments. 🖤♥️
Follow on Twitter
Missing some tweets in this thread? Or failed to load images or videos? You can try to .